• Apr 27 2024

புற்றுநோயால் போராடும் 'KGF' பட நடிகர்... மாதம் இத்தனை லட்ச ரூபாய் செலவா.... பணத்திற்காக என்ன செய்கிறார்..? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2018ம் ஆண்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 'கே.ஜி.எஃப்- சாப்டர்-1' படம் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி இருக்கின்றது.  

இவ்வாறாக நடிகர் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, KGF படத்தில் காசிம் சாச்சா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ் ராய் என்பவர் தற்போது 4 ஆவது நிலை புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளமை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது KGF  பட நடிகர் ஹரிஷ் ராய், முதல் முறையாக தான் புற்றுநோயுடன் போராடி வரும் தகவலை பிரபல ஊடகம் ஒன்றில் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய தொண்டை பகுதியில் ஒரு சிறிய கட்டி இருப்பதை முதலில் கண்டு பிடித்ததாகவும், இது குறித்து பரிசோதனைக்காக மருத்துவரை அணுகியபோது, அறுவை சிகிச்சை செய்ய கூறியதாகவும், குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்ததால் அப்போது செய்ய முடியவில்லை என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கின்றார். 

மேலும் அவர் கூறுகையில் "தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தால் என்னுடைய குரல் பாதிக்கப்படுமா என நினைத்து நான் பயந்தேன். அதனால் நான் நடித்துக் கொண்டிருந்த KGF படத்தை நடித்து முடித்த பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார்.

அத்தோடு "நான் என்னுடைய அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தி கொண்டே சென்றதால், என்னுடைய தொண்டையில் இருந்த புற்றுநோய் நுரையீரலுக்கு பரவியது" என்று கன்னட யூடியூப் சேனல் ஒன்றிக்கு கொடுத்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் திரைப்படத்தில் நடிக்கும் போது, ​​ஹரிஷ் ராய்க்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ​​உடனடியாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். 

இவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்வதற்கு பணம் இல்லாததால், பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் நிறுவனமான கித்வாய்க்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அந்த அரச வைத்தியசாலையில் அவருக்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கீமோதெரபி சிகிச்சையையும் தொடர்ந்து செய்து கொண்டார். 

எனினும் இவரின் உடம்புநிலை தொடர்பாக தற்போது மற்றுமொரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது அவர் புற்றுநோயின்  நான்காவது கட்டத்தை எட்டியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து பின்னர் ஹரிஷுக்கு புதிய சிகிச்சை முறைகள் சிலவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்த  நிலையில், அந்த சிகிச்சைக்கான செலவும் அதிகம் என்றாலும் தொடர்ந்து அவர் சிகிச்சைகளை மேற்கொண்ட வண்ணமே வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஒரு மாதத்திற்கு மட்டும் இந்த சிகிச்சைக்கு இவர் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். புற்று நோய்க்கான இந்த அட்வான்ஸ் சிகிச்சை முறையின் மூலம் இப்போது நன்றாக உணர்வதாகவும், ஓரளவிற்கு உடல் நிலை தெரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் KGF படத்தில் நடித்த போது கழுத்தில் இருந்த வீக்கத்தை மறைக்க தாடி வளர்த்து இவர் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அதுமட்டுமல்லாது இவர் தொடர்ந்து சிகிச்சைக்கு பணம் தேவை என்பதால் தன்னுடைய நோயைப் பொருட்படுத்தாது ஓய்வின்றி நடித்து வருகிறார்.இவரது பரிதாப நிலையை கண்டு, கண்டன திரையுலகை சேர்ந்த சில பிரபலங்கள் இவரது சிகிச்சைக்கு உதவ முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement