• Apr 26 2024

இனித்தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது ...லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் - செம குஷியில் ரசிகர்கள்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு   நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றது. சொல்லப்போனால் பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்படத்திற்கு கூடுதலான எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.அதற்கு மிகமுக்கிய காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். 

மேலும் லியோ படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகின்றது. சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது. குறிப்பாக 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா லியோ படத்தில் நடித்து வருகின்றார்.

இதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் தற்போது லியோ படத்திலிருந்து வெளியான அறிவிப்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிரபல நடிகர் மன்சூர் அலி கான் தற்போது லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகரான மன்சூர் அலி கான் லியோ படத்தில் நடிப்பதாக பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் இதுவரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமலே இருந்தார்.எனவே ரசிகர்கள் மன்சூர் அலி கான் லியோ படத்தில் நடிக்கிறாரா இல்லையா என கவலையில் இருந்தனர். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி மன்சூர் அலி கான் லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என தகவல் வந்துள்ளது.



இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் குஷியில் இருக்கின்றனர். லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலி கானின் தீவிர ரசிகர் என்பதை பலமுறை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். எனவே லியோ படத்தில் மன்சூர் அலி கானுக்கு தரமான ஒரு கதாபாத்திரம் கொடுத்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement