• May 03 2024

இந்தியன் 2 படத்திற்காக ஒதுக்கப்பட்ட இறுதி பட்ஜெட் இத்தனை கோடியா?- பேச்சுவார்த்தையை முடித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிலைத்து நிற்கும் நடிகர் தான் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்து விட்டன எனலாம். இதனால் தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த சில ஆண்டகளுக்கு முதலே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர். இதனாலே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்தியன் 2 மீண்டும் தொடங்கப்பட்டதற்கு விக்ரம் படத்தின் வெற்றி ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.


இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இறுதி பட்ஜெட் இப்போது நிர்ணயிக்கப்பட்டு லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு இடையில் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

படத்துக்கு 230 கோடி ரூபாய் பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்தோடு படத்தில் முக்கிய வேடத்தில் காஜல அகர்வால் மற்றும் ராசி கண்ணா ஆகியோரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement