• May 03 2024

சூர்யாவுடன் 5வது முறையாக கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்- அடடே இவரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்', 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது நிறைவடைந்துள்ளது.மேலும் பல்வேறு பிரச்சனைகளால் எஞ்சிய படப்பிடிப்புகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தவிர வாடிவாசல் என்னும் படத்திலும் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.


இதனை அடுத்து யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தியானது முதலிலேயே பரவி வருகின்றது.

இரண்டு பகுதிகளாக உருவாக்கப்படும் இந்த படமானது ஆகஸ்ட் 21 அல்லது 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான பூஜையுடன் ஒரு வார கால அட்டவணையுடன் தொடங்கும். பின்னர் படக்குழு இரண்டு மாத கால அட்டவணையில் கோவா செல்லவுள்ளது.


இதற்கிடையில் பரபரப்பான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் 'சூர்யா 42' படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்ற சூடான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'மாயாவி', 'ஆறு', 'சிங்கம்' மற்றும் 'சிங்கம் 2' ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யாவுடன் இது ஐந்தாவது முறையாக தேவிஸ்ரீ கூட்டணி அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement