• Apr 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மகனா இது..அட எப்படி வளர்ந்திட்டாரு..வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்சில் மீனா கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹேமா .இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் வித்தியாசமான நடிப்பு மக்களை கவர வைத்தது என்று தான் கூற வேண்டும்.

போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்த இவர் மீடியா துறையில் ஆர்வம் கொண்டதால் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.

இவர் 2015 தாம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைபடத்தில் ஹேமா ராஜ்குமார் அறிமுகமானார்.“ஆறாது சினம்” என்ற தமிழ் படத்தில் சிறந்த நடிகர்களான அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற நடிகர்களுடன் விமலா என்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்தார்.



பாயும் புலி, ஆறாது சினம்,சவரகதி,வீரனை மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா என்ற பிரபலமான படங்களில் இவர் நடித்தார்.இவருடைய நடிப்பில் 2015 தாம் ஆண்டு சிறந்த நடிகர்களின் ஒன்றான “வீரனை” படத்தில் பாராட்டப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்று வருகிறது. இவர் சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது கர்ப்பமாக இருந்தார்.

அதனால் சீரியலிலும் இவர் கர்ப்பமாக இருப்பது போல காண்பிக்கப்பட்டு இருந்தது.அத்தோடு, சீரியலில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது போல காண்பிக்கப்பட்டு இருந்தது. அதே போல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. மேலும், இவரது மகனுக்கு சாத்விக் என்று பெயர் வைத்துள்ளனர்.


இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கிருஷ்ண ஜெயந்திக்காக தனது மகனை கிருஷ்ணன் போல் வெளிக்கிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement