• May 03 2024

குட்டி டவுசர் அணிந்து... பட்டனை அவிழ்த்து விட்டு... இரண்டு ஆண்களுடன் பீச்சில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா நடிகையாக இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சி போஸ்களால் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானவர்  நடிகை நோரா ஃபதேஹி. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது அழகான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.


இவர் கனடிய நடிகை மட்டுமல்லாது மாடல், நடனக் கலைஞர், பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அதுமட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல மொழிப் படங்களிலும் தோன்றியுள்ளார். அத்தோடு பாகுபலி பார்ட் 1-இல் நடன கலைஞராக தமிழுக்கு அறிமுகமானமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சினிமாவில் முதன் முதலில் 'கர்ஜனை: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் 2015 ஆம் ஆண்டில், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 9 இல் போட்டியாளராக கலந்து கொண்டார்.  84 நாட்கள் அங்கு தாக்குப்பிடித்த  நடிகை நோரா அதன் மூலமாக மென்மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.


பின்னர் வேறு சில ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இதையடுத்து இவருக்கு பாலிவுட்டில் அதிகளவிலான வாய்ப்புகள் கிடைத்தன.

அதோடு மியூசிக் ஆல்பங்களையும் அதிக அளவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். அதிலும் குறிப்பாக இவரது ஆல்பம்  24 மணி நேரத்தில் YouTube இல் 20 மில்லியன் வியூவர்ஸை கடந்தமை வியக்கத்தக்க ஒரு விடயம்.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் நடிகை நோரா தற்போது தனது நடன வீடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு கடற்கரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.. இந்த வீடியோவிற்கு  பலர் இதயம் மற்றும் நெருப்பு ஈமோஜிகளை அதிகளவில் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement