• Apr 28 2024

நயன்-விக்கி தம்பதியினர் மீது காவல் நிலையத்தில் எழுந்த புகார்... வழக்குப்பதிவு செய்த வழக்கறிஞர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் அது நயன்-விக்கி தம்பதியினரின் வாடகைத்தாய் விவகாரம் தான். அதாவது திருமணமாகி 1வருடம் கூட ஆகாத நிலையில் திடீரென இருவரும் தாங்கள் தாய் தந்தையாகிவிட்டதாக கூறி குழந்தைகளின் பாதங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்துள்ளதாகவும் கூறியிருந்தனர். இதனால் ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.


அதனைத்தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து பல கேள்விகளும் எழும்பி வந்தது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளது.

அதாவது திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு கட்டாயம் குழந்தை பெறும் தன்மை இருக்கக்கூடாது. முறையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் இவர்கள் அது எதையுமே பொருட்படுத்தவில்லை.


இதையடுத்து அரசு சார்பில் இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.

அதாவது மத்திய மற்றும் மாநில சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் மீது வழக்கறிஞ்சர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


அதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்துள்ளது. அதாவது கர்ப்பப்பையில் பிரச்சினை, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழல்  உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். 


இந்த விதிகளின்படி வாடகை தாய் தேவை என மருத்துவ சான்றிதழை மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெற வேண்டும். ஆனால் இது எதையுமே பின்பற்றாமல் அரசு விதிமுறைகளை மீறி திருமணம் ஆகி சில மாதங்களில் குழந்தை பெற்றுள்ளனர். 

இதனால் இது இளைஞர்களுக்கு ஒரு பிழையான முன்னுதாரணமாக இருக்கிறது. ஆகவே நயன்-விக்கி தம்பதியினர், வாடகைத்தாய், சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஆகியோரை விசாரணை செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர். 

Advertisement

Advertisement

Advertisement