• May 04 2024

முதல் ஆளாக ஷூட்டிங்கை முடித்த பிரபல நடிகர்-வாரிசு படம் பற்றிய வெளியிட்ட பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் அப்செட்டை கொடுத்தது.இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தெலுங்கில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய வம்சி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.மேலும் இவர் இயக்கும் இரண்டாவது தமிழ் படம் இதுவாகும். ஏற்கனவே கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியுள்ளார்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுதவிர பிரபு, ஷியாம், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரித்து வருகின்றார்.




பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நடிகை ராஷ்மிகா விஜய்யுடன் செல்பி எடுத்து பதிவிட்டு இருந்தார்.

அத்தோடு தீபாவளிக்கு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது, அதன்படி இசையமைப்பாளர் தமனும் இது குறித்து பதிவிட்டு இருந்தார்.



இந்நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீமன் வாரிசு திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்புகாக நன்றி தெரிவித்து இயக்குநர் வம்சியுடன் எடுத்து கொண்ட  புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அவரின் பதிவில் “வாரிசு பட வாய்ப்புக்கு நன்றி, எப்போதும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட மாட்டேன். நன்றி தில் ராஜூ, நன்றி இயக்குநர் வம்சி, நன்றி என் ஆருயிர் நண்பா விஜிமா, உனது ஆதரவை மறக்கவே மாட்டேன்” என கூறியுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement