• Apr 27 2024

மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்.. டிஜிட்டல் உரிமம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

டான் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ப்ரின்ஸ். வித்தியாசமான ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் நிறைவடைந்துள்ளது.

அத்தோடு இப்படம் வரும் தீபாவளியில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.அதன்படி இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

டோலிவுட் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படமாக உருவாகி வரும் பிரின்ஸ் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது.



விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் டிஜிட்டல் ரிலீஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 42 கோடி ரூபாய்க்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அந்த படத்தை வாங்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தமன் இசையில் அனிருத் குரலில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிளான பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் அந்த பாட்டில் சிங்கிள் டேக்கில் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடனமாடும் வீடியோவும் அவருடன் சேர்ந்து உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடனமாடும் வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.அத்தோடு  மாவீரன் படத்தை முடித்து விட்டு கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement