• May 04 2024

தனம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து வாயடைத்துப் போன குடும்பத்தினர்- மகிழ்ச்சியில் மூர்த்தி- அட்டகாசமான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து, தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.

எதிர்பாராத திருப்புமுனைகளுடன் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், போன்ற பல நடித்து வருகின்றனர்.


இந்த சீரியல் துவங்கியதில் இருந்து, அவ்வபோது பிரபலங்கள் மாறி வருவது வழக்கமாக உள்ளது.இது ஒரு புறம் இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது நகைக்குரிய சீரியலாக மாறியுள்ளது. காரணம் முல்லை ,ஐஸ்வர்யா இருவரும் தான் கர்ப்பமாக இருந்தார்கள்.

இதனை அடுத்து தற்பொழுது தனமும் கர்ப்பமாகியுள்ளார்.ஆனால் அதை எப்படி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வது என்று தெரியாமல் மூர்த்தியும் தனமும் குழப்பத்தில் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் வீட்டிற்கு வரும் தனத்தின் அண்ணா மற்றும் அண்ணி தனம் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை சொல்லி விட்டனர். இதனால் வீட்டிலுள்ளவர் குஷியடைந்துள்ளனர். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement