• Jul 16 2025

ஸ்ரீகாந்தால் குழப்பத்தில் நிற்கும் ரச்சிதா... நடிக்க ஆரம்பித்ததும் நேர்ந்த நெருக்கடி!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பான அதிர்ச்சி தகவல் தற்போது தமிழ்த் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதாக கூறப்படும் இவரை பொலீஸார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.


முன்னணி ஹிந்தி மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்துள்ள நடிகர் ஸ்ரீகாந்த், அண்மையில் மும்பையில் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலீஸாரின் தகவலின்படி, மருத்துவபரிசோதனையின் போது போதைப்பொருள் பயன்படுத்திய தடயங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.


ஸ்ரீகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருந்த ஒரு தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகின்றது. அதில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் படம்பிடிக்கப்பட்டதா? அல்லது பாதியில் நிற்கிறதா? என்பது தற்போது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. படப்பிடிப்பு இன்னும் முடியாமல் இருந்தால், தயாரிப்பாளர் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மனச்சோர்வுடன் இருப்பதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் தற்பொழுது நிகழ்ந்த சம்பவம் பெரும் ஏமாற்றத்தையே ரச்சிதாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement