• Jul 16 2025

"குபேரா" வசூலால் குபேரனைப் போல கலக்கும் தனுஷ்.! குஷியில் ரசிகர்கள்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தனது அழுத்தமான நடிப்பு மற்றும் திரைக்கதை தேர்வுகளால் எப்போதும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து வருபவர். தற்போது அவரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் தான் “குபேரா”. 


ஜூன் 20, 2025 அன்று வெளியான “குபேரா” திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளம் வைத்துள்ள இந்த இயக்குநர், “குபேரா” மூலம் தமிழில் தனது புதிய முயற்சியை எடுத்துள்ளார்.


இப்படம் வெளியான முதல் நாளில் 30 கோடிக்கும் மேலாக வசூலித்திருந்தது. இதனால் ரசிகர்கள் இப்படம் இனிவரும் நாட்களில் அதிகளவான வசூலைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தும் வகையில் 5 நாட்களில் "குபேரா" 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement