• Jun 26 2024

கலவரமாக மாறிய குணசேகரன் வீடு... மறுத்துப் பேசிய கதிர்... தாரா எடுத்த அதிரடி முடிவு... விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்தவகையில் தர்ஷினியின் ஃப்ரெண்ட் சேர்ந்து படிப்பதற்காக வீட்டிற்கு வந்திருக்கின்றார். இதனால் வீட்டில் பெரிய ரகளை செய்கிறார் குணசேகரன். அதற்கு அந்த பையன் "என்னால் உங்கள் வீட்டில் பிரச்சனை வேண்டாம் நான் சென்று விடுகிறேன்" என சொல்கின்றார். அதற்கு தர்ஷினி "அவர் கொஞ்ச நேரம் கத்திட்டு தானாகவே அடங்கிடுவாரு" என்கிறார். 

அதை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கு சென்று  மீண்டும் கத்திக் கொண்டிருக்கின்றார் குணசேகரன். பின்னர் ஸ்கூலில் "நாங்கள் இருவரும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்கிறோம் அதனால் அதற்காக நோட்ஸ் எடுப்பதற்காக தான் அவன் இங்கு வந்தான்" என தர்ஷினி எவ்வளவு சொல்லியும் அதனைக் கேட்காத குணசேகரன் வார்த்தைகளை தேள் போல கொட்டுவதை நிறுத்தியபாடில்லை. 

இதனையடுத்து கோபமான தர்ஷினி "நான் செய்தது தான் தவறு. இது ஒரு காட்டுமிராண்டி வீடு என தெரிந்தும் உன்னை இங்கே வரவைத்தது என்னுடைய தப்பு தான். தயவு செய்து இங்கு இப்படி நடந்ததற்கு நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாம் ஸ்கூலில் சந்திக்கலாம்" என சொல்லி அவரை அனுப்பி விடுகிறாள். 

அத்தோடு "படிக்கிறது ஒரு குத்தமா? இந்த வீடு தான் அப்பா உங்களுடையது இந்த உலகம் எல்லாருக்கும் சொந்தமானது. இனிமேல் என்னை சார்ந்தவர்கள் யாரும் இந்த வீட்டுக்கு வரமாட்டார்கள் ஆனால் நான் செல்வேன். எல்லா விஷயத்திலும் சாதிப்பேன். யாராலும் என்னை தடுக்க முடியாது. உங்களை அப்பா என சொல்லவே எனக்கு அசிங்கமாக இருக்கிறது" என சொல்கிறாளர் தர்ஷினி. 


மீண்டும் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற குணசேகரன் "அப்போ உயிரை விட்டுரு, அப்பா என சொல்ல பிடிக்கலனா நான் கொடுத்த உயிர் மட்டும் எதுக்கு" என்கிறார். இதை கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் ஐஸ்வர்யா வந்து ஞானத்திடம் " அப்பா இன்று முதல் நான் புது ஸ்கூலுக்கு போகிறேன். உங்களுக்கு பிடிக்காது என தெரியும் ஆனால் நிச்சயம் நீங்கள் பெருமைப்படும்படி நான் இருப்பேன்" என சொல்கிறார். இதை கேட்ட ஞானத்திற்கு உடனே ஆனந்த கண்ணீர் வருகிறது. 

இதனைத் தொடர்ந்து வீட்டின் சுட்டி பெண் தாரா வந்து நந்தினியிடம் "இன்னைக்கு எங்க ஸ்கூலில் பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங் இருக்கு, அப்பா தான் வரவேண்டும் என மிஸ் சொன்னாங்க" என்கிறார். அதற்கு கதிர் என்னால் போக முடியாது என்கிறான். அப்படி உங்களால் வரமுடியவில்லை என்றால் இங்கிலீஷில் லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு கொடுங்கள் என்கிறாள் தாரா. என்னால் அதெல்லாம் போட முடியாது என்கிறான் கதிர். 

பின்னர் நந்தினி நான் வருகிறேன் என சொன்னதும் "தேவையே இல்லை எனக்கு அப்பா அம்மா இரண்டு பேருமே இல்லை" என சொல்லிக்கொள்கிறேன் என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். 

மறுபுறம் பட்டம்மாள் சொத்து இன்றைக்கு ஜீவானந்தம் பெயரில் மாறிவிடும் என்பதால் அதற்கான கன்ஃபர்மேஷன் காலுக்காக காத்திருக்கிறார். அப்போது அந்த சமயத்தில் அவருக்கு போன் செய்தவர் உங்கள் பெயரில் மாறிவிட்டது என்கிறார். அதை செக் செய்து பார்த்ததில் பட்டம்மாள் ஷேரின் ஓனர்ஷிப் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்பதை உறுதிசெய்கின்றனர். இதனால் அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். இதனையடுத்து அடுத்த கட்ட வேலைகளை தொடங்க தயாராகிறார்கள். 

மேலும் பள்ளியில் தர்ஷினி பாக்ஸிங் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறாள். அவள் சண்டையிடுவதை ஒட்டுமொத்த ஸ்கூலே வாய்பிளந்து பார்த்து கொண்டு இருக்கிறது. அவள் பாக்ஸிங் செய்வதை பார்த்த ஈஸ்வரி பெருமைபடுகிறாள். ஆனால் தர்ஷினி ஜெயித்த பிறகு சோர்ந்து போய் விடுகிறாள். அடுத்த வாரம் மேட்ச் இருக்கிறது. அதனால் அவளுக்கு ஊட்டச்சத்தான உணவு கொடுக்க சொல்லி மாஸ்டர் கூறுகிறார். இவ்வாறாக நேற்றைய எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement