• May 18 2024

ஷு தமிழின் மாரி சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள சுந்தரி சீரியல் பிரபலம்- அடடே இந்த நடிகரா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. 

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.கருமை நிறம் கொண்ட பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையாகும். இதில், அவளது கல்யாண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களை எடுத்துக் காட்டுகிறது.


இதில் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திக்கின் தில்லாலங்கடி வேலைகளும் அவரது குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இன்னும்  முருகனுக்கும் அனுவுக்கும் தெரிந்தால் என்ன நடக்கும் என்பதே ரசிகர்களின் ஆர்வமாக இருக்கின்றது.


இந்த நிலையில் சுந்தரி சீரியலில் பழனி என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் அருண் பத்மன். இவரது காட்சிகள் தற்பொழுது ஒளிபரப்பப்படுவதில்லை. இதனால் இவர் தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் மாரி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement