• May 05 2024

விஜய் டிவி சீரியல்களின் ரன்னிங் டைம்மில் ஏற்பட்ட மாற்றம்- அடடே பிக்பாஸ் நிகழ்ச்சியால் இந்த சீரியல் எல்லாம் முடிவுக்கு வருதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்களும் ரியாலிட்ரி ஷோக்களும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. விஜய் டிவி சீரியல்கள் தான் டி ஆர் பியிலும் முன்னணியில் இருக்கின்றன.

மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 9ம் திகதி ஆரம்பமாகின்றது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.


இந்த நிலையில் பிக்பாஸ் ஆரம்பிப்பதால் பல சீரியல்கள் முடிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் தற்பாழுது வெளியாகியிருக்கும் தகவலின் படி மௌனராகம் சீசன் 2, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி சீசன் 2, ஈரமான ரோஜாவே சீசன் 2 ,பாக்கியலட்சுமி ,பாண்டியன் ஸ்டோர் ஆகிய சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டு விட்டதாகவும் பாரதி தாசன் காலணி சீரியல் சில காலம் இடை நிறுத்தப்படவுள்ளாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் கண்ணான கண்ணே சீரியல் ஒளிபரப்பபடவுள்ளது. இந்த சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலின் ரன்னிங் டைம் மாற்றப்படதாததால் பெரும்பாலும் பிக்பாஸ் தொடங்க முதல் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்து விட்டிருமோ என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















Advertisement

Advertisement

Advertisement