• Mar 16 2025

பாசி மாலை விற்ற பேரழகிக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் கோடி கணக்கில் சம்பளமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

உத்திரப்பிரதேச மாநில மகா கும்பமேள திருவிழாவில் ருத்ராட்ச மாலைகளை விற்று வந்த மோனாலிசா என்ற பெண் சமூக வலைத்தளங்களில்  ட்ரெண்டிங்கான நிலையில், அவருக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

குறித்த திருவிழாவில் மோனலிசா போஸ்லே பாசி மாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றை அகோரிகள், பாபாக்களுக்கு நடுவே விற்றதை யூட்யூபர் ஒருவர் வீடியோவாக எடுத்து ரிலீஸ் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மோனாலிசாவின் வசீகர தோற்றத்தையும் காந்த கண்ணழகையும் பார்த்த யூட்யூபர்கள், போட்டோ கிராபர்கள் மோனாலிசாவை நோக்கி விரைந்து பேட்டி எடுத்தும் வீடியோ பதிவு செய்தும் அவரை ட்ரெண்டிங் ஆகியுள்ளனர். 


இந்த நிலையில், மோனலிசா போஸ்லேவிற்கு பாலிவுட்டில் நடிக்க  வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' படத்தில் அவரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

சனோஜ் மிஸ்ரா, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால், ராம் கி ஜன்மபூமி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர். மேலும் இந்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்க அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.


அத்துடன் இதில் மோனலிசா இராணுவ வீரர் ஒருவருக்கு மகள் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, ஏற்கனவே இந்த தகவல் வெளியான போதும் தற்போது அதனை உறுதியாக்கும் வகையில் இயக்குநர் தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

Advertisement

Advertisement