• Mar 15 2025

உண்மையை சொல்லுமாறு வித்யாவை மிரட்டிய முத்து.. விஜயாவை மடக்க ரோகிணி போட்ட புது பிளான்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு, ரவியும் ஸ்ருதியும் தமது திருமண நாளை முன்னிட்டு பத்திரிகை அடித்து வீட்டாருக்கு கொடுக்கின்றார்கள். அதில் ஒவ்வொருவருடைய பெயரும் போட்டு இருக்க, மனோஜ் உடைய பெயரை எதற்காக போட்டா என்று முத்து கேட்கின்றார். மேலும் ரவிக்கு உனது ஷோரூமில் இருந்து கிப்ட் கொடுக்குமாறு முத்து சொல்லுகின்றார்.

அந்த நேரத்தில் முத்துவுக்கு போன் வருகின்றது. அதில் தாத்தாவின் உறவினர் வித்தியாவின் புகைப்படத்தை காட்டி அவர் தான் போனை தொலைத்ததாக சொல்கின்றார். இதனால் இந்த விஷயத்தை மீனாவிடம் சொன்ன முத்து, நேரடியாக வித்யா வீட்டுக்கு செல்கின்றார்.


அங்கு வித்தியாவிடம் போனை பற்றி விசாரிக்க அவர் இதனை ஒரு பிளாட்பார்ம் கடையில் வாங்கியதாகவும் இதனால் தனக்கு 2000 ரூபாய் லாஸ் எனவும் தெரிவிக்கின்றார். முத்து குறுக்கு கேள்வி கேட்டபோதும் அதற்கு எல்லா சமாளித்து விடுகின்றார் வித்யா. இதனால் முத்து எதுவும் பண்ண முடியாமல் மீண்டும் வந்து விடுகின்றார்.

வீட்டுக்கு வந்து நடந்தவற்றை மீனாவிடம் சொல்ல, அவற்றையெல்லாம் ரோகிணி கேட்கின்றார். அதன் பின்பு வித்தியா வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டு அவருடன் மீண்டும் சமாதானம் ஆகின்றார் ரோகினி. மேலும் வீட்டில் தனக்கு பேய் பிடித்ததாக எண்ணி மனோஜ் அடித்து துவைக்கும் விஷயத்தையும் சொல்லுகின்றார்.

மேலும் இதற்கு பேய் பிடித்தது போலவே நடித்து அவர்களை மடக்க இருப்பதாகவும் புதிய பிளான் போடுகின்றார் ரோகிணி. அத்துடன் ஸ்ருதியின் ஃபங்ஷனுக்கு வித்தியாவையும் அழைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement