• May 07 2024

திருச்சிற்றம்பலம் படத்தின் 4வது சிங்கிள் பாடலும் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை'திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று ஹாலிவுட் வரை அமர்க்களம் செய்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக தி கிரே மேன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தை இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர்,இயக்கியுள்ளார்.இப்படத்தில் இவருடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராக்‌ஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளன.

இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகவுள்ளது.செம்ம ஜாலியான கமர்சியல் படமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து 'தாய் கிழவி' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதில் இருந்தே, தனுஷ் - அனிருத் காம்போவின் எனர்ஜி மீண்டும் எகிறத் தொடங்கியது. அடுத்தடுத்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில், தற்போது 4வது சிங்கிள் வெளியாகியுள்ளது.

'தேன்மொழி பூங்கொடி' எனத் தொடங்கிம் இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். தனுஷ் காதலில் துவண்டுப் போய் பாடும் சோகப் பாடலாக வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டை ஆக்கிரமித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement