• May 05 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்- என்னது ரிலீஸ் பண்ணப் போவது கிரிக் கெட் வீரரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்குநரான மணிரத்தினம் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'பொன்னி நதி' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. A R ரஹ்மான் குரலில் இந்த பாடல் அமைந்துள்ளது. பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ளார்.

https://twitter.com/LycaProductions/status/1553387572063502336

'இந்த படத்தின் முதல் பாடலான பொன்னி நதி தமிழ்ப் பாடலை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட உள்ளார்.பொன்னி நதி தெலுங்கு பாடலை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து நாளை மாலை 6 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார். இந்தி மற்றும் கன்னட மொழிகளில் எந்த விளையாட்டு வீரர்கள் வெளியிட போகின்றனர் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement