• May 04 2024

அடேங்கப்பா...மூன்று நாட்களில் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தனம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது.

தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு பேய் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக, அதே திகில் கதைக்களம் கொண்ட டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படமும் சந்தானத்திற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement