• Sep 25 2023

பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் களமிறங்கிய அர்ஜுன் தாஸ்... அவரே கூறிய குட் நியூஸ்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'அநீதி'. இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து வனிதா விஜயகுமார், காலி வெங்கட், பரணி எனப் பலரும் நடித்துள்ளனர்.


இப்படமானது விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நடிகர் அர்ஜுன் தாஸ் பல விடயங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். 


அதாவது "இன்னுமோர் வாய்ப்புக் கிடைத்தால் வசந்த பாலனுடன் நடிக்க விருப்பமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது அநீதி படத்தைத் தொடர்ந்து மேலும் பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாகவும், அப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் அல்லாமல் ஒரு பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அர்ஜுன் தாஸ் அந்த சந்திப்பில் கூறியுள்ளார். 


இவரின் இந்தப் பேட்டியானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement