• May 02 2024

நாளை முதல் தங்கலான் பட ஷுட்டிங் ஆரம்பம்- அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?- குஷியான ரசிகர்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்பொழுது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பா.இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் இந்தப் படம் கண்டிபாக கோலிவுட்டின் அடையாளமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்விதமாக தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவும் அமைந்திருக்கிறது.


 1870ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் கேஜிஎஃப்பில் வாழ்ந்த பழங்குடி மக்கள் பற்றி படமாக்கியிருக்கிறார் இரஞ்சித். இதனால் இது வேறு தளத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில் கடந்த மாதம் தங்கலான் படத்தின் ஷூட்டிங் ரிகர்சலின்போது விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இதனையடுத்து அவரது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதற்கிடையே, தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப பா.இரஞ்சித் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த நிலையில் விக்ரம் முழுவதுமாக காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் எப்போது தங்கலான் ஷூட்டிங் தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருந்தது. சமீபத்தில் நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது பேசிய இரஞ்சித், தங்கலான் படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தங்கலான் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் நாளை மறுநாள் (ஜூன் 15) மதுரையில் தொடங்கவிருக்கிறது. இந்த ஷெட்யூலானது மொத்தம் 12லிருந்து 15 நாட்கள்வரை நடக்கலாம் என கூறப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement