• May 04 2024

நான் போகனும் என்ன வெளிய அனுப்புங்க -பிக்பாஸிடம் கெஞ்சிய தனலட்சுமி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாம் வாரம் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி உள்ள நிலையில் தற்போது 21 போட்டியாளர்கள் என விறுவிறுப்புடன் செல்கின்றது.

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. 

இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிலமிஷம் செய்த அசல் கோளாறுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தனலட்சுமி.இந்நிலையில் பிக்பாஸ் நான் ரொம்ப கஸ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தேன் இருந்தாலும் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு போகப்போறேன்.எனக்கு கோபம் அதிகமாக வந்தால் எப்பிடி பேசுவேன் என்று தெரியாது.அதை மட்டும் பார்த்து என்னை வெளியில விட்டுருங்க.என பிக்பாஸிடம் கெஞ்சியுள்ளார்.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement

Advertisement