• May 04 2024

வாரிசு படத்தின் ஒரே ஒரு பாடலுக்காக கெஸ்ட்டாக இணைந்த பிரபலம்- அப்டேட்டை வெளியிட்ட தமன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு. இதன் படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் வாரிசு படத்தின் ஒரு பாடல் காட்சியை படமாக்குவதற்கு மட்டும் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிந்துள்ளார் என இசையமைப்பாளர் தமன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ப்ரின்ஸ் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் இந்த தகவலை தமன் கூறியுள்ளார். 

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் என்பதோடு விரைவில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Advertisement

Advertisement

Advertisement