• Jun 08 2026

தலைவி இஸ் பேக்...! ஒரே போட்டோவில் இணையத்தை சூடேற்றிய அரோராவின் புதிய லுக்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் மூலம் பிரபலமான மாடல் அழகி அரோரா சின்க்ளேர், தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார். ஒருகாலத்தில் 'பலூன் அக்கா' என ட்ரோல் செய்யப்பட்ட அவர், இன்று தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய அவரது பயணம், பின்னர் பிக் பாஸ் சீசன் 9 வரை சென்றது. ஆரம்பத்தில் கவர்ச்சி மாடலாக மட்டுமே பார்க்கப்பட்ட அரோரா, பிக் பாஸ் வீட்டிற்குள் தனது எதார்த்தமான பேச்சு, முதிர்ச்சியான அணுகுமுறை மற்றும் சக போட்டியாளர்களுடன் பழகிய விதம் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான பதிவுகளை அவர் கணிசமாக குறைத்திருந்தார். இதனால் அவரது பழைய ஸ்டைலை விரும்பிய ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். மேலும், பிக் பாஸ் மூலம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்கல்வி நோக்கிலும் கவனம் செலுத்தி வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை அரோரா பகிர்ந்துள்ளார். மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள அந்த ஸ்டைலிஷ் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "தலைவி இஸ் பேக்", "பழைய அரோராவை மீண்டும் பார்க்கிறோம்", "இதே எனர்ஜியை தொடருங்கள்" என கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் மூலம் புதிய அடையாளம் பெற்ற அரோரா, தற்போது மீண்டும் தனது சமூக வலைத்தள வருகையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


Advertisement

Advertisement