• May 04 2024

சூப்பர் ஹிட் ஷோவில் தல தீபாவளி கொண்டாடிய புகழ்- மாகாபா செய்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சிரிப்புடா என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியவர் தான் புகழ்.ஆரம்ப காலங்களில் மெக்கானிக் செட்டில் பணி புரிந்த இவர் தனது காமெடி திறமையின் மூலமே இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றினார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பெண் வேடம் அணிந்து நடித்து வந்தார்.

இருப்பினும் அவை சரியான அடையாளத்தை பெற்றுக் கொடுக்கவில்லை எனலாம். இருப்பினும் இவர் சோர்வடையாது குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றி தனது காமெடி திறமையால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளதோடு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.


தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் தனது காதலியான பிரின்சி என்பவரைக் கரம் பிடித்தார். திருமணத்திற்குப் பிறகு இவர் முதல் முறையாக ஊ சொல்லுறியா ஊ ஊ சொல்லுறியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

எனவே இந்த வருடம் அவருக்கு தல தீபாவளி என்பதால் இந்த நிகழ்ச்சிக் குழு அவருக்கு ஆடை மற்றும் பழங்கள் என்பனவற்றை கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.இதனால் ரசிகர்களும் புகழுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement