• May 09 2024

துணிவு பட இயக்குநரின் புதிய படத்தில் கதாநாயகனாகும் பிரபல மாஸ் நடிகர்- அடடே வேற லெவல் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இவர் திரையுலகில் அறிமுகமாகிய காலத்தில் இவரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் தனது கடின முயற்சியினானும் சிறப்பான படங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதாலும் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். வெற்றிமாறனின் இயக்கத்திலான பொல்லாதவன், ஆடுகள, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களும், செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களும் தனுஷின் திரைவாழ்வில் முக்கிய படங்களாக அமைந்தன. 


பல தேசிய விருதுகளையும் பெற்ற இவர்  அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேட்பன் மில்லர், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இதேபோல் சதுரங்க வேட்டை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான்   H.வினோத், இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தீரன், அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை இயக்கிய  H.வினோத், அடுத்ததாக அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில்தான் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் H வினோத் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement