• May 04 2024

தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல் திரைப்படங்கள்.. எந்த சேனலில் எந்தெந்த படங்கள் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பல தொலைக்காட்சி சேனல்களும் ஸ்பெஷல் திரைப்படங்கள் பலவற்றையும் வெளியிடக் காத்திருக்கின்றன. 


அந்தவகையில் சன் டிவியில் காலை 11 மணிக்கு நடிகர் வடிவேலு நடிப்பில்வெளிவந்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படமும், மாலை 6 மணிக்கு  விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படமும்ஒளிபரப்பப்பட உள்ளது.


அதேபோன்று விஜய் டிவியில் காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும், பிற்பகல் 2 மணிக்கு மாளிகப்புரம் என்கிற டப்பிங் படமும், மாலை 5 மணிக்கு கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படமும் இரவு 8 மணிக்கு கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.


மேலும் ஜீ தமிழில் காலை 1 மணிக்கு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த யானை திரைப்படமும், மாலை 4 மணிக்கு ரக்‌ஷித் ஷெட்டி நடித்த 777 சார்லி திரைப்படமும் ஒளிபரப்பாகவுள்ளன. 

அதுமட்டுமல்லாது கலைஞர் டிவியில் காலை 10 மணிக்கு ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு அருண் விஜய்யின் சினம் திரைப்படம், மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும், இரவு 8.30 மணிக்கு ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement