• May 02 2024

மாமன்னன் படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்த காரியம்- நெகிழ்ந்து போன மாரி செல்வராஜ்

stella / 10 months ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள் கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கி மாரி செல்வராஜ் 3வது படமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும், மலையாள நடிகரும் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படத்தில் தமிழில் நடித்தவருமான பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.


இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு ஆக்கியது. இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இத்திரைப்படத்தில் மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் முற்றும் மாறுபட்டு நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.

இதுவே உதயநிதியின் கடைசி திரைப்படம் என அவரே கூறியுள்ளார். இப்படத்தை பார்த்த தனுஷ், கமல் ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் படம் சிறப்பாக இருக்கிறது என தங்களது விமர்சனத்தை தெரிவித்தனர்.


இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மகன் நடித்த மாமன்னன் திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜை கட்டித்தழுவி கொண்டாடியுள்ளார்.இதை இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். 


மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement