• May 17 2024

'நா ரெடி' பாடலுக்கு வலுக்கும் கண்டனங்கள்... அதிரடியாக எச்சரிக்கை வாசகத்தை இணைத்த படக்குழு..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன 'நா ரெடி' பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது.


இப்பாடல் ஆனது வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. அந்தவகையில் போதைப்பொருள் பழக்கம், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பட ‘நான் ரெடி’ பாடல் உள்ளதாக கூறி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன.


இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தற்போது திடீர் முடிவு ஒன்றினை எடுத்துள்ளனர். அதாவது 'நா ரெடி' பாடல் லிரிக் வீடியோவில் "புகைப்பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்" என்ற எச்சரிக்கை வாசகத்தை இணைத்துள்ளனர். 

Advertisement

Advertisement