• May 18 2024

தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவின் சொத்து மதிப்பு... வெறும் இத்தனை கோடி தானா..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமன்னா என்னதான் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் அவர் முதலில் நடித்தது ஹிந்தி படத்தில் தான். அதன் பின்பு தான் அவர் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

மேலும் தமன்னா சினிமாவுக்கு வந்து 16 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போதும் பிசியான நடிகையாக தான் இருக்கிறார். அதாவது படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து அவர் நடித்து வரும் நிலையில் இன்றுவரை அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்நிலையில் சமீபகாலமாக தமன்னாவின் காதல் விவகாரம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது பாலிவுட் பட நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனை உறுதிப் படுத்தும் வகையில் தமன்னா பேட்டி ஒன்றினையும் அளித்திருந்தார்.


இதனையடுத்து தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவின் சொத்து விபரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் விஜய் வர்மாவின் சொத்து வெறும் 17 கோடி தான் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement