• Aug 29 2026

இரவும் பகலும் வேர்வை சிந்துவது... வெறும் ஐட்டம் என்று கூப்பிடத்தானா? தமன்னா பகீர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், திரைப்படங்களில் இடம்பெறும் சிறப்பு பாடல்களை ‘ஐட்டம் சாங்’ என்று அழைப்பது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில் பேசிய தமன்னா, “திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களை ‘ஐட்டம் சாங்’ என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அந்த வார்த்தை பெண்களுக்கு மரியாதைக்குரியதாக நான் கருதவில்லை. ஒரு பாடலுக்காக நடிகைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 


பல நாட்கள் பயிற்சி, நீண்ட நேர படப்பிடிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவாக அந்த பாடல்கள் உருவாகின்றன. அப்படிப்பட்ட முயற்சியை வெறும் ‘ஐட்டம்’ என்று குறிப்பிடுவது அந்த பெண்ணின் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய மரியாதையை வழங்குவதில்லை." என்று கூறியுள்ளார்.

மேலும், திரைப்பட பாடல்களை கலைநிகழ்ச்சியாகவும், நடிகைகளின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகவும் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தமன்னாவின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக பெண்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் திரைப்படத் துறையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இதனால் அவரது இந்த பேச்சு இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement