• May 09 2024

அரசியல்வாதியை கரம் பிடித்த தனுஷ் பட நாயகி ! வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கர் நடிகர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான 'ராஞ்சனா' படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்தவர்.

மிகவும் போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து மிகவும் பிரபலமானவர். அதே போல் அடிக்கடி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் கருத்துக்களை பதிவிட்டு விமர்சனங்களுக்கும் ஆளாகி வருபவர்.

குறிப்பாக ஸ்வரா பாஸ்கர்,  அடிக்கடி மோடி அரசை விமர்சித்து பல முறை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ள இவர், தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரசியல் பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவரும், இளைஞர் தலைவருமான ஃபஹத் அகமதுவை இன்று நடிகை ஸ்வரா பாஸ்கர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இன்று அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஃபஹத் மற்றும் ஸ்வரா பாஸ்கர் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில்,  இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்திருந்தாலும், விரைவில்... பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புள்ளகாக கூறப்படுகிறது.

மேலும், இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement