• Jun 18 2024

நடிப்பை தாண்டி புதிய தொழிலில் களமிறங்கும் சூர்யா…அடடே இது என்ன புது கதையா இருக்கே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பரபரப்பான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் இதைத்தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டார் சூர்யா. எனவே தொடர்ந்து ஹிட் படங்களாக சூர்யா நடித்து வருவதால் அவர் தற்போது நடித்து வரும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகின்றார். அத்தோடு பிதாமகன் படத்திற்கு பின்னர் இவர்கள் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா. மேலும் சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்திலும், இன்று நேற்று நாளை பட இயக்குனரின் படத்திலும் சூர்யா நடிக்கின்றார். இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. அத்தோடு சூர்யா ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருவகின்றார்.

எனினும் சமீபத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கு வழங்கப்பட்டது. சுதா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை தட்டி சென்றது. இதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அத்தோடு பல திரைபிரபலங்களும் நடிகர் சூர்யாவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா தற்போது வெற்றிகரமான நடிகராக வலம் வரும் நேரத்தில் புதியதாக ஒரு தொழிலை துவங்கவுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. என்னவென்றால் சென்னையில் சூர்யா சில திரையரங்குகளை லீசில் எடுக்க இருக்கிறாராம்.

ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி தரமான படங்களை கொடுத்து வரும் சூர்யா தற்போது திரையரங்க உரிமையாளராகவும் செயல்பட இருக்கின்றார்.அத்தோடு தெலுங்கில் இதுபோல சில முன்னணி ஹீரோக்கள் தங்களுக்கு சொந்தமாக சில திரையரங்குகளை வைத்திருக்க தற்போது தமிழில் சூர்யாவும் திரையரங்க உரிமையாளராக மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement