• Sep 24 2024

வெளியானது ‘சூர்யா 44’ படத்தின் பிறந்த நாள் ஸ்பெஷல் வீடியோ. ஆனால் ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திக் சுப்புராஜ்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் நடித்து வரும் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக இன்று அதிகாலை 12.12 மணிக்கு ’சூர்யா 44’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் கூறியிருந்தார். அதேபோல் இன்று காலை 11 மணிக்கு சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் பாடல் ஒன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 12.12 மணிக்கு வெளியான ’சூர்யா 44 ' படத்தின் வீடியோவில் சூர்யா வாயில் சிகரெட் கையில் துப்பாக்கியுடன் மாசாக வரும் காட்சியும் இறுதியில் அவர் துப்பாக்கியால் சுடும் காட்சியும் உள்ள வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இருப்பினும் இந்த வீடியோவின் இறுதியில் ’சூர்யா 44’ படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுடன் இந்த வீடியோ முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ’சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, பூஜா கிட்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  உருவாகி வரும் இந்த படத்தை  2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.


Advertisement

Advertisement