• May 04 2024

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அசலானவர் டீ வியாபாரியா? வைரலாகும் காணொளி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்த நிலையில், அச்சு அசலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கும் நபரொருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


குறித்த காணொளியை திடீரென பார்க்கும்போது , அரை டவுசருடன் ரோட்டில் நின்று டீ விற்பது போல் காணப்படுகிறது. குறித்த காணொளி பார்ப்பவர்களின் மனதை உலுக்கிவிடுகிறது.

குறித்த காணொளியில் சூப்பர் ஸ்டார் ரஜினி போல உள்ள நபர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,  குறித்த நபர் கேரள மாநிலம் கொச்சியில் டீக்கடை ஒன்றை வைத்து டீ விற்பனை செய்து வருகிறார்.


எனினும் அவரது பெயர் முழுமையாக தெரியவில்லை. ஆனால் அவர் ரஜினியின் தோற்றத்தில் இருப்பதால் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேவேளை, குறித்த காணொளியை பார்த்த ரசிகர்கள் அது ரஜினி இல்லை என்பதை இன்னமும் நம்ப மறுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement