• Dec 05 2022

தளபதி 67 படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- அடடே இந்த மலையாள நடிகரும் நடிக்கின்றாரா?

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

தெலுங்கு இயக்குநரின் படத்தில் முதல் முதலாக விஜய் நடிப்பதால் இப்படம் எப்படியான கதைக்களம் அமைந்த படமாக இருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.அத்தோடு படத்திலிருந்து அடிக்கஎ அப்டேட்டுக்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியிருந்தது.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பிப்பதாகவும் அதற்கான பணிகளில் லோகேஷ் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பெயர் அடிப்பட்டு இருக்கிறது.

அதாவது அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பக்கத்தில் "Life time settlement for those who can master this selfie" என பதிவிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களை குறிப்பிட்டு உள்ளதால் அவர் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக் சொல்லப்படுகிறது.