• Dec 10 2022

பத்துத் தல படத்திலிருந்து சிம்பு வெளியிட்ட சூப்பர் அப்டேட்- கேக் வெட்டிக் கொண்டாடிய பிரபலங்கள்

Listen News!
stella / 2 weeks ago
image
Listen News!

சில்லுனு ஒரு காதல்','நெடுஞ்சாலை'போன்ற படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா என்பவர் தற்பொழுது பத்து தல என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

 இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 


கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.


இந்நிலையில் 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது