• May 08 2024

"மாற்றத்த எங்ககிட்ட இருந்து Start பண்றோம்".. மகள்களின் புகைப்படம் பகிர்ந்து ரகுமான் சொன்ன தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் மட்டுமில்லாமல், இசை அமைப்பாளராக சர்வதேச அரங்கிலும் அதிக கவனம் ஈர்த்து வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த 'ரோஜா' திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தான்  ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அதன் பின்னர்  தொட்டது எல்லாம் தூள் என்ற கணக்கில் தான் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து சென்ற ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றதுடன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.

மேலும் இவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால்  தனக்கென ஒரு ரசிகர்கர் பட்டாளத்தை கொண்டார். சமீபத்தில் கூட இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருந்த படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

எனினும் இதனைத் தொடர்ந்து, பத்து தல, பொன்னியின் செல்வன் 2, லால் சலாம், மாமன்னன், கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் புதிய படம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் இசைப்புயல். எனினும் இந் நிலையில்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள்களின் புகைப்படத்துடன் எ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ள கருத்து இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

எலக்ட்ரிக் கார் ஒன்றுடன் தனது மகள்களான கதீஜா ரஹ்மான் மற்றும் ரஹீமா ரஹ்மான் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், ARR ஸ்டூடியோஸின் Metaverse ப்ராஜெக்ட்டின் முன்னணி இளம் தயாரிப்பாளர்களாக இருக்கும் கதீஜா மற்றும் ரஹீமா ஆகியோர், Go Green என்பதை ஆதரிக்கும் விதமாக எலக்ட்ரிக் காரை அவர்கள் பயன்படுத்த போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு  மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்ற சூழலில் இதனை முன்னெடுத்து எலக்ட்ரிக் காரை மகள்கள் பயன்படுத்த உள்ளதை பெருமிதத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.




 

Advertisement

Advertisement

Advertisement