• May 04 2024

லியோ படத்தின் மூன்றாவது பாடல் குறிதது வெளியாகிய சூப்பர் அப்டேட்- எப்போது ரிலீஸ் தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் மாதம் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் இருப்பதோடு படத்தில் ஏகப்பட்ட டுவிஸ்ட்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இருப்பினும் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் லியோ படத்துக்கான அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேறு வழியை யோசித்த படக்குழு ரிலீஸுக்கு முதல்நாள் பெய்டு ப்ரீமியர் ஷோவை திரையிடவுள்ளதாக கூறப்படுகின்றது.


படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான நா ரெடிதான் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் வாயில் சிகரெட்டுடன் அந்தப் பாடலில் நடனம் ஆடியிருந்தார். அதேபோல் பாடல் வரிகள் முழுக்க போதையும், வன்முறையும் நிறைந்திருந்தன. அதனையடுத்து Bad Ass என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அன்பெனும் என்ற பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விஜய், த்ரிஷா போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறது. படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள்தான் என்று முன்னர் கூறப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ரொமான்ஸ் மெலடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement