• May 18 2024

விஜய்டிவியின் பிரபல காமெடி நடிகருக்கு பிக்பாஸ் அனுப்பி வைத்த சூப்பர் கிப்ட்- வைரலாகும் வீடியோ- இது தான் சஸ்பென்ஸா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.அது இது எது உள்ளிட்ட பல விஜய் டிவியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மூலம் ரசிகர்களை மகிழ்த்துவருகிறார். பெரும்பாலும் பெண் வேடங்களையே அதிகம் ஏற்றிருக்கிறார்.

இவருக்கு அண்மையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.  மரியா என்பவரைத் தான் திருணம் செய்து கொண்டார்.இவரது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாகநடைபெற்றிருந்தது.

 இவரது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் ஒரு சிலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் திருமணத்திற்கு பின்னர் தனது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் நாஞ்சில் விஜயனுக்கு பிக்பாஸிடமிருந்து ஒரு பெட்டி பரிசாக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதில் என்ன இருக்கு என்பது காட்டவில்லை.

இதனால் இவரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகின்றாரா, அந்த பெட்டியில் அப்படி என்ன கிப்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடனே ரசிகர்கள் அவர் பிக்பாஸ் 7வது சீசனின் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக வர வாய்ப்பு இருப்பதாகவும் பேசி வருகின்றனர்.



Advertisement

Advertisement