• May 03 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- விரைவில் வருகிறதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கும் முக்கிய நடிகராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் இந்த ஆண்டு டான் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்து. இதில் டான் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அந்த வகையில் இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தை மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசியவிருதுகளை வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். 


அதேபோல் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்து வருகிறார்.விறுவிறுப்பாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்த சில அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

 அதன்படி இப்படத்தை வருகிற 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை வருகிற டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.இதனால் எஸ்.கே ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement