• May 12 2024

போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் சுப்பர் ஸ்ட்டார்! அட இவங்க எல்லாம் நடிக்கிறாங்களா? வெளியாகியது புதிய அப்டேட்!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தலைவர் 170 படத்திற்காக ஜெய் பீம் படத்தின் இயக்குனரான ஞான வேலுடனும், தலைவர் 171 படத்திற்காக சமீபத்திய லியோ படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடனும் இணைந்திருக்கிறார் ரஜினி.



இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தின் பூஜை வேலைகள் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பான அப்டேட் வெளியாகியிருக்கிறது. 



இந்த படத்தில். மாமன்னன் படத்தை தொடர்ந்து தலைவருக்கே வில்லனாகியிருக்கிறார் நடிகர் ஃபகத் ஃபாசில். அந்த வகையில் தலைவர் 170 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரள மாநில திருவனந்தபுரத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.



இறுதிச்சுற்று படத்தின் நாயகி ரித்திகா சிங் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் இவரும் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு  மலையாள நடிகையான மஞ்சு வாரியார் இந்த படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், தெலுங்கு நடிகரான ராணா தகுபதி இந்த படத்தில் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில்  ரஜினி  170 படத்தில் போலீஸ் அதிகாரியாக தலைவர் நடிக்கவிருக்கிறார். மேலும், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுத்துவட்டாரத்தில் படத்தின்  கதை நடக்கவிருக்கிறது. அதனால், அந்த ஊர் மொழியில் தலைவர் பேசவிருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement