• Apr 28 2024

மூன்று நாட்களில் சந்திரமுகி 2 திரைப்படம் பெற்ற வசூல் எத்தனை கோடி தெரியுமா?- வெளியாகிய கலெக்ஷன் விபரம்

stella / 6 months ago

Advertisement

Listen News!

18 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வசூல்ரீதியாக ஹிட் கொடுத்த திரைப்படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது சந்திரமுகி 2. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடம் கலவையான விடர்சனங்களைப் பெற்று வருகின்றது. அதிலும் முதல் பாகத்தினை ரீமேக் செய்துள்ளனர் என்றெல்லாம் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்த மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சந்திரமுகி 2 திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.ரூ. 60 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement