• May 06 2024

இயக்குநருக்காக பாடல் பாடிய சிறுமி... நேரில் வந்து சர்ப்பிரைஸ் கொடுத்த பிரபலம்... கண்கலங்க வைத்த Super Singer ப்ரோமோ வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில்  senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் Dedication Round இடம்பெறுகின்றது. இதில் சிறுமி ஒருவர் அந்த ஷோவில் இயக்குநர் மாரி செல்வராஜ் படங்களிலிருந்து தான் பாடல்களை எடுத்துப் பாடி வருகின்றார்.

அந்தவகையில் குறித்த சிறுமி பாடி முடித்ததும் மாரி செல்வராஜ் அரங்கத்திற்கு வந்து சர்ப்பிரைஸ் கொடுக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி கண் கலங்கி அழுகின்றார். மேலும் தனக்காக சார் நேரில் வந்தது ரொம்ப ஹாப்பி ஆக இருப்பதாக கூறுகின்றார்.


மேலும் மாரி செல்வராஜ் கூறுகையில்"அஸ்வினி அவளோட மேடையை அவளே உருவாக்கி அதில் அவளே மகாராணியாய் நிக்கிறாள் என்பது எனக்கு ரொம்ப ஹாப்பி ஆக இருக்கு" என்கிறார். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!  


Advertisement

Advertisement

Advertisement