• Oct 16 2024

ஜோசியத்தை எதிர்த்ததால் தான் மாரிமுத்து இறந்தாரா..? உண்மையை உடைத்த 'எதிர்நீச்சல்' அப்பத்தா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் மாரிமுத்து. சமீபகாலமாக சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்துவரும் இவருக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. 


இவ்வாறாக வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வரும் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தமை பலருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 


மேலும் இவர் இறப்பதற்கு முன்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்று ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை எனக்கோரி அங்கிருந்த ஜோதிடர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இவரின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் ஜோதிடர்கள் தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து தீயாக பரவி வருகின்றது.


இந்நிலையில் 'எதிர்நீச்சல்' சீரியலில் பட்டம்மாள் என்ற அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பம்பாய் ஞானம் என்பவர் இது குறித்து தனது கருத்துக்களினை சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கின்றார்.


அதாவது அவர் கூறுகையில் "நமக்கு வாய்ப்பு வருது எனவே அதை வைத்து பணம் சம்பாதிக்கணும் என்பதில் ஈடுபட்டிருக்கின்றார். மேலும் டாக்டர் ஒரு 10நிமிஷத்துக்கு முன்னாடி வந்திருந்தால் கூட காப்பாத்திறதற்கு சான்ஸ் இருந்திருக்கும் என்றார். ஆனால் அவர் தானாகவே கார் ஓட்டிப் போகணும் என்று அவருக்கு தோன்றி இருக்கு என்றால் அவ்வளவு தான் விதி. விதிதான் மதியை வைத்து இப்படி அவரின் கதையை முடித்துள்ளது" எனக் கூறியுள்ளார். 


மேலும் "ஜோசியத்தை எதிர்த்ததால் தான் அவர் இறந்தார் என்று சொல்ல முடியாது, ஜோசியத்தை எதிர்க்கிறதால தான் ஒராளுக்கு மரணம் என்றால் ஊர் உலகத்தில் நம்பாதவங்க ஏராளம் பேர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் உயிரிழப்பு நடந்திருக்கணும், அதனால் ஜோசியத்தை எல்லாம் நாம் குறை சொல்ல முடியாது, அவரோட விதி அவ்வளவு தான், டிக்கட் கன்பார்ம் ஆயிடிச்சு, அதனால் இறந்து விட்டார்" எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement