• May 06 2024

மெட்ரோ ரயில்களில் அனிரூத்திற்காக ஒட்டப்பட்ட சூப்பரான போஸ்டர்கள்- அடடே இது தான் விஷேசமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து நிற்பவர் தான் அனிரூத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.தொடர்ந்து விஜய், அஜித் ,கமல், ரஜனி எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதிலும் இவர் இறுதியாக இசையமைத்திருந்த டாக்டர், டான், பீஸ்ட், விக்ரம் ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கில் வியூவர்ஸை அள்ளிக் குவித்தது என்பதும் முக்கியமாகும்.


இது தவிர இவரது கைவசம் ஜெயிலர் ,ஜவான் ,இந்தியன் 2, ஏகே 62 திரைப்படங்கள் உள்ளன. இவை அடுத்த ஆண்டு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு பிஸியானவராக வலதட வரும் இவர் தற்போது தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

சென்னையில் அக்டோபர் 21 ஆம் தேதி அவரின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் அனிரூத்தின் புகைப்படங்கள் முழுவதும் இடம்பெறுவது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement