• May 19 2024

நடிகர் அஜித் இப்படி ஒரு பிசினஸ் பண்ணினாரா?- இதுவரை யாரும் கேள்விப்படாத விடயம்- என்ன ஆச்சு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் அஜித். தனது கம்பீரமான தோற்றத்தாலும் அழகினாலும் இயல்பான நடிப்பினாலும் தனகெ்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.நடிப்பைத் தவிர பைக் ரேசிங் மற்றும் கார் ரேசிங்கிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.மேலும் இப்படம் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்கள் அவரின் ரசிகர்களிடையே பரவி வருவது வழக்கம்.அப்படி அஜித் அளித்த பழைய பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் அளித்திருந்த பேட்டியில் தான் சொந்தமாக ஈரோட்டில் Textile குறித்த பிசினஸ் தொடங்கியதாகவும், அப்போது தனக்கு மாடலிங் மற்றும் மோட்டர் பைக் ரேஸிங்கில் ஆர்வம் இருந்தது என்றும் கூறினார்.

பின்னர் பிசினஸில் நஷ்டம் ஏற்பட்ட பிறகு மாடலிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தியதாக பேசியிருக்கிறார். இவரின் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement