• Oct 09 2024

super- ஜி காவாலயா பாட்டுக்கு மனைவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகர் பப்லு- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு,  உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர் தான் நடிகர் பிரித்திவிராஜ். இவர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான வானமே எல்லை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.இதன் பிறகு பாண்டிநாட்டு தங்கம், அழகன், வீரமணி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.

இதனை அடுத்த சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த கண்ணான கண்ணே என்னும் சீரியலில் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு முதலில்  பினா என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்ததோடு இவருக்கு 25 வயதில் ஒரு மகனும் இருக்கின்றார்.மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்தது.


 இதனால் சில ஆண்டுகள் சினிமா மற்றும் சீரியலில் இருந்து ஓய்வெடுத்து மகனை குணப்படுத்த நிறைய சிகிச்சை முறைகளை பப்லு மேற்கொண்டார். இந்த நிலையில் பப்லுவுக்கும் பினாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அத்தோடு பப்லு இரண்டாவதாக 23 வயதுடைய மலேசிய பெண்ணை திருமணம் செய்து கொண்டர்.

திருமணத்திற்கு பிறகு பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டியளித்து வந்த இவர் தற்பொழுது தனது இரண்டாவத மனைவியுடன் இணைந்து காவாலயா என்னும் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement