• Sep 27 2023

samantha- வுக்கு காதல் பரிசு வழங்கிய ராஜா ராணி சீரியல் நடிகர்- ரொம் குஷியாக இருக்கிறீங்க போல- வெளியாகிய வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடித்துள்ள 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் விஜய் தேவர்கொண்டா மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், சமந்தா தன்னுடைய வெகேஷனை வெளிநாட்டில் என்ஜாய் செய்து வருகிறார்.

குஷி படத்தில் நடித்து முடித்த பின்னர் திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும், இதற்க்கு காரணம் இவரை ஆட்டி படைத்து வரும் மயோசிட்டிஸ் பிரச்சனை என கூறப்படுகிறது.


குஷி படத்தின், இசை வெளியீட்டு விழாவில் கூட நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனையால் அதிகம் அவதி பட்டார் என்று கூறி இருந்தார். மேலும் இதுவரை அவருக்கு அந்த பிரச்சனை சரியாகவில்லை என்பதையும் உறுதி செய்தார்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரில் நடித்த பிரதோஷ் அண்மையில் சமந்தாவை அழகிய பரிசுடன் நேரில் சந்தித்துள்ளார். அவரிடன் தான் வாங்கி வைத்த அழகிய பரிசை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பிரதோஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து சந்தோஷப்பட்டுள்ளார்.

தற்போது சமந்தா நியூ யார்க் சென்றுள்ளதோடு அங்கு எடுக்கபபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement